யாருக்கு ஏங்குது மனசு

மேலும் தொடர்புக்கு [email protected] இந்த பகுதி படித்துவிட்டு உங்களுக்கு மனதில் இருக்கும் உங்ங்கள் வாழ்வில் நடந்தவற்றை கூறுங்கள்.

Hangouts

மனைவியை விட்டு பிரிந்திருக்கும் ஆண்கள்
மற்றும்

காதலியை விட்டு பிரிந்து வேறு ஊரில் இருக்கும் ஆண்களின் மனதை ஆராய்ந்தால் அதில் முக்கியமான கவலையாக பெண்கள் வேறு ஆண்களுடன் பழகிவிடக்கூடாதே என்ற கவலைதான் இருக்கும்.

சிலருக்கு இக்கவலை மிக அதிகமாக மனதை வாட்டி எடுக்கும்.

அதை வைத்து மனைவியை சந்தேகப்படுவது முதல் கொண்டு பல்வேறு எரிச்சலை காட்டிக் கொண்டே இருப்பார்கள். ”என் வீட்டுக்கு தோழி குடும்பத்தோடு வந்திருந்தார். நானும் தோழியும் மொட்டை மாடிக்கு அரட்டையடிக்க சென்று விட தோழியின் கணவர் குழந்தைகள் விளையாடுவதை கண்கானித்துக் கொண்டு கீழே இருந்தார்.

அப்போது வெளிநாட்டில் இருந்து என் கணவர் என் மொபைலுக்கு போன் செய்ய தோழியின் கணவர் அதை எடுத்து “அவுங்க என் மனைவியோடு மேலே பேசிட்டு இருக்காங்க” என்று சொல்லி இருக்கிறார்.

அன்றிரவு முழுவதும் என் கணவர் என்னை திட்டி தீர்த்தார். என் மொபைலை என் தோழியின் கணவர் எடுத்து பேசியதை அவரால் தாங்க முடியவில்லை. சட்டென்று அவர் மனம் ஏதேதோ கற்பனை செய்து கொண்டிருக்கிறது. அதை புரிந்து கொண்டு மெல்ல மெல்ல அவரை சமாதானப்படுத்துவற்கு முன்னால் போதும் போதும் என்றாகிவிட்டது” என்றார் ஒருவர்.

கேரளாவில் மருத்துவ நுழைவுதேர்வு கோச்சிங் கிளாசில் படித்த ஒருவர் சொன்னது இது

“ நாங்கள் இருந்த ப்ளாட்டில் உள்ள பெண்கள் எங்களிடம் பேசவே மாட்டார்கள். ஒரு சிரிப்பு கூட சிரிக்க மாட்டார்கள். நாங்கள் ஆண்கள் பேச்சிலர்கள் என்றாலும் மனிதனுக்கு மனிதன் காட்டும் அடிப்படை இன்முகத்தை கூட காட்ட மாட்டார்கள். ஒருநாள் தைரியமாக அதை கேட்டு விட்டோம்.

அதில் ஒரு பெண் “ இங்கே என்ன செய்தாலும் அந்த செய்தி உடனே வேறு பெண்கள் மூலமாக அவர் கணவருக்கு சென்று விடும். அவரிடமிருந்து வெளிநாட்டில் உள்ள கணவர் காதுக்கும் சென்று விடும். அதன் பிறகு பெரிய பிரச்சனையாகிவிடும். அதனால்தான் நாங்கள் உம்மென்று இருந்து விடுகிறோம்” என்றிருக்கிறார்.

இந்த பத்தியை சாதரணமான சராசரியான ஒரு ஆணாகவே எழுதுகிறேன்.

மனைவியை விட்டு பிரிந்து வாழும் ஆணுக்கு மூன்று கவலைகள் இருக்கும்.

– மனைவி வேறு ஆணுடன் பழகி அவர் புனிதம் போகாமல் இருக்க வேண்டும்.

– மனைவி வேறு ஆணுடன் பழகி அதனால் அவருக்கு ஒரு பிரச்சனை வராமல் இருக்க வேண்டும்.

– மனைவி தன் குழந்தைகளை சரியாக கவனித்து கொள்ள வேண்டும். இந்த மூன்று கவலைகளில் எது தன் மனதில் முன்னால் நிற்கிறது என்று ஒரு ஆண் கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு நம்பர் கொடுப்போம்.

ஒழுக்கம் – 1 பாதுகாப்பு – 2 குழந்தைகள் – 3
இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றொரு ஆண் தன் மனதை திரும்ப திரும்ப கேட்டுக் கொள்ள வேண்டும்.

இது எந்த காம்பினேசனில் வேண்டுமானாலும் இருக்கலாம். 123, 321, 312 , 213 என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால் தன் முற்ப்போக்கு பாவனைகள் எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அந்தரங்கத்தில் மனதின் ஆழத்தில் என்ன காமினேசன் வருகிறது என்பதை குறித்து கொள்ள வேண்டும்.

குறித்து கொண்டு எதற்கு அதிகம் கவலைப்படுகிறோமோ அதை நுணுக்கமாக பிரித்து பிரித்து ஆராய்ந்து தெளிவுற்றால் ஒரளவுக்கு இப்பிரச்சனையில் இருந்து தப்பலாம்.

உதாரணமாக மனைவியின் ஒழுக்கம் பற்றிய ஒரு எண்ணம் திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தால் மிஞ்சி மிஞ்சி போனால் என்ன நடந்து விடும் என்பதை விநாடி விநாடியாக யோசித்து பார்த்தால் ஒரு தெளிவு கிடைத்து விடும்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தனியறை நெருக்கம் எவ்வளவு நேரம் அதிகபட்சம் நீடித்து விடும்.

நிமிடத்துக்கு மேலே எந்த நெருக்கமான உயிர் என்றாலும் பிரிந்துதான் ஆக வேண்டும். மனிதர்களால் யாரையும் அதிக நேரம் கொண்டாடிவிட முடியாது.

எதுவுமே இயற்கைக்கு மாறாக நடந்து விடவில்லை. விடாது என்று ஒருமுறை யோசித்து முடித்தால் ஒரளவுக்கு இம்மன உளைச்சலில் இருந்து தப்பலாம்.

இதில்லாமல் ஆண் பெண் மேல் சந்தேகப்படுவதற்குரிய மிகப்பெரிய காரணமாக ஆணின் செக்ஸ் Superimposition மனநிலைதான் காரணமாக இருக்கிறது.

தன்னுடையை செக்ஸ் அலையை தன் மனைவியின் செக்ஸ் அலையோடு ஒப்பிட்டு அவன் குழம்பிப் போகிறான்.

ஆணாகிய எனக்கு செக்ஸ் உணர்வு இருக்கிறது.அது பத்து நிமிடத்துக்கு ஒருமுறை வந்து வந்து போகிறது.அதை நான் தனியாக இருக்கும் போது சுய இன்பம் செய்து கொள்கிறேன்.சுய இன்பம் செய்வதற்கு முன்னார் எனக்குள் இருக்கு வெறி அதை செய்த பிறகு ஒடிவிடுகிறது.மனம் காலியாகி நிம்மதியாக திருப்தியாக உணர்கிறேன்.நிம்மதியாக தூங்குகிறேன்.
இப்படி யோசிக்கிறான்.

மாதிரியான தன் செக்ஸ் மனது அலையை மனைவிக்கும் பொருத்துகிறான்.

மனைவிக்கும் என்னைப் போல செக்ஸ் உணர்வு இருக்கும்.என்னைப் போல பத்து நிமிடத்துக்கு ஒருமுறை வரும்.அதை அவள் தனியாக இருக்கும் போது என்னைப் போல் சுய இன்பம் செய்து தணித்து கொள்ளவில்லை. அப்படியானால் அந்த உணர்வை அவள் என்ன செய்வாள்.செக்ஸ் அலை உணர்வு அவளுக்குள் திரும்ப திரும்ப அடித்துக் கொண்டே இருக்குமே.அந்த ஆர்வத்தில் அவர் வேறு ஆணை தேடிவிடுவாரோ?

இப்படி தன் செக்ஸ் அலையை மனைவியின் அலையோடு பொருத்திப் பார்க்கும் போது மாபெரும் குழப்பம் அடைந்து விடுகிறான்.

வெளிநாடுகளில் வாழும் கொஞ்சம் முற்போக்கான ஆண்கள் தங்கள் மனைவிக்கு சுய இன்பம் செய்து கொள்ள அட்வைஸ் செய்து கொள்வதும் இந்த மனநிலையின் காரணமாகத்தான்.

சில ஆண்கள் சரியாக தங்கள் மனைவியை குறிப்பிட்ட தினத்தில் திருப்திப்படுத்துவதில் குறியாய் இருப்பார்கள். அதை ஒரு வித கச்சிதமாக முடிக்க நினைப்பார்கள்.

Related sex stories :   எனக்கு சொர்க்கவாசலை காட்டிய செக்ஸி வேலைக்காரி !

மனைவியை திருப்திப்படுத்துவதில் மனைவியின் சுகம் மற்றும் கணவன் சுகம் தாண்டி, மனைவி தன் பீலிங்ஸை வேறு பக்கம் திருப்பிவிடக் கூடாது என்ற காரணத்தின் காரணமாகவும் பல உடலுறவுகள் நடக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

திரும்ப திரும்ப ஆணுக்குள்ள பிரச்சனை இதுதான்.

இவ்வளவு வீரியமுள்ள அப்போதே எனக்கு வேண்டும் என்ற வெறியை செக்ஸ் உணர்வு தனக்கு கொடுக்கும் போது அதே மாதிரிதானே மனைவிக்கும் இருக்கும். ஆனால் அவள் தன்னை விட்டு பிரிந்து வேறு ஒரு ஊரில் இருக்கிறாளே. அவளுக்கு சரியாக சுய இன்பம் செய்யும் பழக்கமும் கிடையாதே. அப்படியானால் இந்த இடைவெளியில் அவள் உணர்வு எழுச்சியை பயன்படுத்திக் கொண்டு இன்னொரு ஆண் உள்ளே புகுந்து விடுவானோ என்ற கவலை அவனை வாட்டுகிறது.

எப்பேர்ப்பட்ட கண்ணியமான ஆணுக்கும் இந்த மன அழுத்தம் உள்ளே இல்லாமல் இல்லை.

இத்தாலிய நாட்டுப்புறக் கதைகளான டெக்காமெரான் கதையில் வித்தியாசமான கதை ஒன்று வருகிறது.

அம்ரோகிலா என்னும் வணிகனும் பெர்னபோ என்னும் வணிகனும் ஒரு மதுபான விடுதில் சக நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அம்ரோகிலா பிற பெண்களை மயக்குவதில் கில்லாடி.

இந்த உலகில் ராணியில் இருந்து கடை நிலை வேலைகளை செய்யும் பெண் வரை மடக்கமுடியாத பெண்ணே கிடையாது என்று சொல்கிறான்.

இதை பெர்னபோ எதிர்க்கிறான்.“எல்லா பெண்களும் அப்படி அல்ல. தன்னை விட்டு பல நூறு மைல் தள்ளி இருக்கும் தன் மனைவி ஜினைரா ஒழுக்கமானவள். அவளை வேறு எந்த ஆணும் நெருங்க முடியாது” என்கிறான்.

அம்ரோகிலா இல்லை நெருங்கலாம் என்று சொல்ல பெர்னபோ முடியாது என்று சொல்ல அது சவாலாகிறது. பெர்னபோ தன் மனைவியை ஈர்த்து காட்டினால் பெர்னபோ ஆயிரம் பொற்காசுகள் தருவதாக சொல்கிறான்.

அம்ரோகிலா சவாலை ஏற்றுக் கொண்டு பெர்னபோ மனைவி ஜினைரா இருக்கும் நகருக்கு வருகிறான்.
அங்கே ஜினைராவின் பணிபெண்ணுக்கு பணம் கொடுத்து ஒரு திட்டம் சொல்கிறான்.

அதன் படி ஜினைராவின் அறையில் பணிப்பெண் பெரிய பெட்டி ஒன்றை வைக்கிறார்.

அது ஒரு அழகு பெட்டி. அறையில் இருந்தால் நல்லது என்று சொல்லி வைத்து செல்கிறார் பணிப்பெண்.

அம்ரோகிலா அப்பெட்டியில் ஒளிந்திருப்பது ஜினைராவுக்கு தெரியாது.

அன்றிரவு ஜினைரா தூங்கும் போது அவள் மார்பில் இருக்கும் மச்சம் ஒன்றை அம்ரோகிலா பார்த்து வைக்கிறான். பின் அவள் உள்ளாடை இரண்டை திருடி வைத்துக் கொள்கிறான்.

பல மைல்கள் பயணம் செய்து பெர்னபோவிடம் ஜினைராவின் மார்பு மச்சத்தையும், உள்ளாடைகளையும் காட்டுகிறான்.

இந்த உலகில் உள்ள எல்லா பெண்களை போலத்தான் உன் மனைவியும் என்று அம்ரோகிலா செய்யும் கேலியை பெர்னபோ அப்படியே நம்புகிறான். தன் பணியாட்கள் இருவரை அனுப்பி ஜினைராவை கொன்று விட்டு வர உத்தரவிடுகிறான்.

பணியாளர்கள் இங்கு வந்து ஜினைராவை கொல்ல போகிறார்கள். ஜினைரா கெஞ்சி கேட்டதற்கு பிறகு காரணம் சொல்கிறார்கள்.

தன்னை உயிருடன் விட்டு விட்டால் இந்த ஊரை விட்டே போய்விடுகிறேன் என்று ஜினைரா கெஞ்சி கூத்தாட பணியாளர்கள் ஜினைராவை விட்டு விட்டு கொன்று விட்டதாக பெர்னபோவிடம் சொல்கிறார்கள்.

ஜினைரா தப்பி ஒரு படகில் ஏறி அலெக்சாண்டிரா நகரை ஆளும் சுல்தானிடம் ஆண் வேடத்தில் வேலைக்கு சேர்கிறார்.

அவர் நன்றாக வேலை செய்வதை பார்த்து சுல்தான் அவரை மந்திரி ஆக்குகிறார். சில வருடங்கள் கழித்து மந்திரி ஜினைரா சந்தையில் உலா வரும் போது அங்கே அம்ரோகிலா மிக வித்தியாசமான பொருட்களை வைத்து வியாபாரம் செய்து கொண்டு இருப்பதை பார்க்கிறார்.

இதெல்லாம் எங்கே சம்பாதிதாய் என்று கேட்க “ பெர்னபோ என்னும் பெரும் வியாபாரிடம் ஒரு போட்டியில் வென்று வாங்கியது” என்றான். பெர்னபோ என்று கேட்டது ஜினைராவுக்கு உடல் எல்லாம் சிலிர்த்தது.

மெல்ல அம்ரோகிலாவிடம் பேச்சு கொடுத்து மது வாங்கி கொடுத்து கேட்கிறார். அங்கே அம்ரோகிலா பெட்டிக்குள் ஒளிந்து இருந்து செய்த தவறை உளறி வைக்கிறான். உடனே ஜினைரா தன் பட்டாளத்தை அனுப்பி பெர்னோபவை தூக்கி வரச் செய்கிறார்.

பெர்னபோ வந்ததும் சுல்தானிடம் அம்ரோகிலா செய்தது, பெர்னபோ செய்தது அனைத்தையும் சொல்லி வைக்கிறார் ஜினைரா. தான் ஆண் வேடத்தில் இருக்கும் பெண் என்றும் சொல்கிறார்.

பெர்னபோ தன் மனைவி குற்றமற்றவள் என்று நினைத்து மகிழ்கிறான். சுல்தான் விசாரித்து அம்ரோகிலாவுக்கு மரண தண்டனை விதித்து பெர்னபோபாவை எச்சரித்து ஜினைராவிடம் சேர்த்து வைக்கிறார்.

இந்த கதையில் பெர்னோபா ஏன் தன் மனைவியை அம்ரோகிலா சோதிக்க ஒப்புக்கொண்டான் ? என்ற கேள்வியை யோசித்து பாருங்கள்.

அது ஆண்கள் பெண்களின் காம உணர்வு மேல் வைத்திருக்கும் புரிதலுக்கு ஒரு எடுத்தக்காட்டாய் விளங்கும்.

பெர்னபா ஆழ் மனம் இதைத்தான் நினைக்கிறது “ நான் வியாபாரம் செய்யும் போது எத்தனையோ பெண்களிடம் பழகுகிறேன். செக்ஸின் உச்ச சுகத்தை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிறேன். இதே சுகத்தை என் மனைவி மட்டும் அனுபவிக்காமல் எப்படி இருக்க முடியும். அது எப்படி சாத்தியம். நிச்சயம் அவளுக்கு ஒரு தொடர்பு இருந்துதான் இருக்கும். ஆனால் அவள் அப்படி இல்லையே. இது எனக்கு ஒரே குழப்பமாய் இருக்கிறதே. அது எப்படி சாத்தியம். சாத்தியமே இல்லை. நடிக்கிறாளாய் இருக்கும்” இந்த எதிர்மறை ஆர்வம்தான் பெர்னபோவை அம்ரோகிலாவிடம் சவால் விட சொல்கிறது.

எப்படி தன் மனைவி மட்டும் பொது தியரிக்கு எதிரானவளாய் இருக்க முடியும் என்ற “ஆண் குறுகுறுப்பு” தான் பெர்னபாவின் சவாலுக்கு காரணம்.

உலகில் இருக்கும் ஆண்கள் அனைவரின் ஆழ்மனதிலும் இந்த பெர்னபா மனநிலை இருக்கிறது. இவ்வளவு தெளிவாக சொல்லும் போது அதை பலர் மறுக்கலாம். ஆனால் ஆழ் மன உணர்வு என்பது தெளிவில்லாத புகை ரூபா உணர்வுதான். அங்கே இருப்பதை நம்மில் பலர் அறியமாட்டோம்.

Related sex stories :   அங்கு நான் கன்ட காச்சி தான் என்னை இவ்வாறு மாற்ற முதல் காரணம்

ஆர்னிகா நாசர் கதையில் திருமணமாகி நான்கே நாட்களில் பிரிந்து செல்லும் கணவன் மறுபடியும் ஊரில் இருந்து வரும் போது மனைவி சொல்கிறார்

“இந்த உலகில் சில மீன்கள் ( Mud fish) வாழ்க்கையை வாழவசதிப்படாத போது குளிர்க்கால நீண்ட உறக்கம் மாதிரி உறங்கி,
பின் வாழ வசதிப்படும் போது உயிர்தெழுமாமே,அது மாதிரி உங்களைப் போன்ற கணவர்கள் எங்கள் உணர்வுகளைப் பற்றி கவலைப்படாமல் வெளிநாடு செல்லும் போதுநாங்களும் நீண்ட குளிர்காலத் தூக்கத்தில் ஆழ்ந்து,எங்கள் உணர்வுகளை ஆசைகளை அடக்கி,மறுபடி நீங்கள் வரும் போது உயிர்தெழுவது மாதிரியான அமைப்பு இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்” என்கிறாள்.

ஆண்களுக்கு மனைவியின் உடல் தூய்மை என்பது திரும்ப திரும்ப மனதில் வந்து பெரும் தொல்லையாகத்தான் இருக்கிறது.

அவனளவில் அதை தனிப்பட்ட அவமானமாக கொள்கிறான். தன்னுடைய இயலாமையாக நினைக்கிறான்.

வருங்கால புத்திசாலி ஆண்கள் இப்பிரச்சனையை எப்படி கையாள்வார்கள்.

1. மனதளவில் மனைவியை ஈர்க்க வைக்க முயற்சி செய்வார்கள்.2. மனைவி பார்க்கும் நினைக்கும் விஷயங்களை உடனே பகிர நினைக்கும் முதல் ஜீவனாக தங்களை உருவாக்கிக் கொள்வார்கள்.3. மனைவியின் மேல் அளவுக்கதிமான ஃபாலோ அப்பை செய்ய மாட்டார்கள்.

1.எல்லா கணவன் மனைவிக்கும் பரஸ்பரம் பல விஷயங்கள் ஒத்துப் போகாமல் இருக்கும். இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியை குறைக்க வாழ்நாள் எல்லாம் அவர்கள் முயற்சி செய்யும் போதுதான் அது சரியான உறவாக இருக்கும். இங்கே பல ஆண்கள் குறிப்பிட்ட சமயத்தில் அந்த இடைவெளியை குறைக்க எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறார்கள்.

கல்யாணம் ஆகிவிட்டது. இரண்டு குழந்தைகளும் ஆகிவிட்டது. இனிமே மனைவி எங்கும் போக முடியாதபடியான சூழலில் இருக்கிறார். பிறகு இடைவெளியை குறைக்க நான் ஏன் முயற்சி செய்ய வேண்டும் என்று இருந்து விடுவார்கள்.

பெண்களுக்கென்று சில பிரத்யோக குறைகள் இருப்பது பல ஆண்களுக்கு தெரியாது.

“என் வீட்டில் ஏழ்மை. என் கணவர் என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனக்கு நகை புடவை வீடு என்று நிறைய செய்கிறார். ஆனால் என் வீட்டைப் பற்றி ஒரு வார்த்தை கேட்டதே கிடையாது. நானும் ஈகோ காரணமாக எதுவும் சொல்லமாட்டேன். என் வீட்டில் இருக்கும் தங்கை அப்பா அம்மாவுக்கும் கொஞ்சம் உதவி செய்யலாம். அல்லது அக்கறையாவது கொள்ளலாம். அதை செய்யாமல் இருக்கும் போது அவர் என்னை என்னதான் ஈர்க்க நினைத்தாலும் ஈர்ப்பு வரவே மாட்டேன் என்கிறது. ஆனாலும் ஈர்ப்பாய் இருப்பது மாதிரி நடிக்க பழகிவிட்டேன். இப்போது வாழ்க்கை அதுபாட்டுக்கு வெளியே பார்க்க மகிழ்ச்சியாகவே போய் கொண்டிருக்கிறது. ஆனால் எனக்குள் உள்ளுக்குள் நான் அவமானப்படுத்தப்பட்டதாக ஒரு சிறையில் மாட்டிக் கொண்டதாகவே உணர்கிறேன்” என்றார் ஒருவர்.

இந்த இடத்தில் அந்த குடும்பத்தலைவி பெண்ணுக்கு வாழ்க்கையில் கணவனோடு மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. ஆனால் அது கணவனுக்கே தெரியாது. தெரிந்தாலும் அதை கண்டுகொள்வதில்லை. புத்திசாலியான வருங்கால ஆண் இந்த இடைவெளியை தேடி தேடி போய் நிரப்பி விட்டு வருவான். இதுவே மனதளவில் ஈர்க்க செய்யும் முயற்சியாகும்.

2. பகிர்தலுக்கான ஆளாக தன்னை வளர்த்து கொள்ளுதலை வருங்கால புத்திசாலி ஆண் செய்வான். ஒரு விஷயத்தை ஒருவரிடம் பகிர்ந்து கொள்ளும் போது அவர் அதை முழுமனதோடு உள்வாங்கி கேட்கும் போது அவரை பிடிக்க ஆரம்பித்து விடும். ஆனால் எல்லா விஷயத்தையும் எல்லோரிடமும் பகிர்ந்து விட முடியாது.

நம் நட்பு வட்டத்தையே எடுத்துப் பாருங்கள்.

டீசண்டாக பேச ஒருவர் இருப்பார். கிரிக்கட் பேச ஒருவர் இருப்பார். செக்ஸ் பேசி அரட்டையடிக்க ஒருவர் இருப்பார். புறம் பேச என்று ஒரு நட்பை வைத்திருப்போம். எவ்வளவு மெச்சூரிட்டியான ஆளுமைகள் என்றாலும் ஒரு நட்பை புறம் பேச என்று வைத்திருப்பார்கள்.

இதைத்தான் ஷாருக்கான் ”டியர் ஜிந்தகி” திரைப்படத்தில் “யார்தான் இங்கே ஸ்பெசல் உறவு இல்லை. ஒவ்வொரு நண்பர்களும் ஒவ்வொரு கோணத்தில் ஸ்பெசல் உறவுதான்” என்பார். இப்படி தனி தனி நட்பாக இருக்கும் அனைத்து நபர்களும் சேர்த்த ஒரு நபராய் வருங்கால புத்திசாலி ஆண் தன்னை வளர்த்துக் கொள்வான். அப்படி இருக்கும் போது மனைவி அந்த கணவனை பார்த்து மாபெரும் கிளர்ச்சி அடைவாள் என்பதில் சந்தேகமில்லை.

இப்படி ஒரு ஆணாய் வளர்த்து கொள்வது எளிதில்லை.

– உயிர்களில் இயல்பான பாலுணர்ச்சியை ஏற்றுக் கொள்வது

-மனைவியின் உணர்வு மாறி கண்ணியமுறையில் பிற ஆண்களிடம் வெளிப்படும் போது அதற்கான வெளியை கொடுப்பது மற்றும் உருவாக்குவது.

– மனைவிக்கு பிடித்த டாப்பிக்குளில் தன்னை பொருத்திக் கொள்வது

– தனக்கு பிடித்த டாப்பிக்குகளை பக்குவமாக திணிக்காமல் மனைவியிடம் பேசுவது.போன்ற பல விஷயங்களை அந்த வருங்கால ஆண் செய்ய வேண்டியதிருக்கும்.

இந்தப் பத்தியின் நோக்கம் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதில்லை.

ஆனால் உடல் தூய்மையை வைத்து மனித இனத்தில் ஒரு இனம் மட்டுமே தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும், புறம் பேசப்பட்டும், பயமுறுத்தப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.

குடும்ப வாழ்க்கையில் உடல் புணர்ச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனப் புணர்ச்சிக்கும் ஆண்கள் கொடுக்கும் போது அங்கே அக்குடும்பத்தில் இனிமையான சூழல் வந்து விடுகிறது. இதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Updated: December 17, 2021 — 7:23 PM

Leave a Reply