கடுப்பை கிளப்பும் பெண்கள் …

இப்டி ஆரம்பிக்குது…

பொண்ணுங்களும் பூக்களும் ஒன்னு சார்…ரெண்டுமே அழகா இருக்கும்.. அதேமாதிரி ரெண்டுத்துக்குமே மூளை கெடயாது…ஒரு விஷயம் கவனிச்சு பாருங்க….ஆண்டவன் ஆம்பளைங்களுக்கு எல்லா திறமையையும் வெச்சு படைச்சான்..ஆனா, அழக கம்மியா வெச்சான்..ஆனா பொண்ணுங்களுக்கு அழக எக்கச்சக்கமா வெச்சான்…ஏன்னு தெரியுமா..ஆண்டவன் ஆம்பள சார்..இந்த எழவெடுத்த எருமைங்களுக்கு அறிவைத்தான் வெச்சு படைக்கல..அட்லீஸ்ட் அழகையாச்சும் குடுப்போம்னுதான்..

இது இடைல …

எதோ நம்ம எதிர்பார்க்கற மாதிரியான ரெண்டு மூணு பொழுதுபோக்கு விஷயங்கள் அவங்க தரப்புல இருக்குதுங்கரதுக்காக எவ்ளோ தான் சார் பொறுத்து போக முடியும்…நம்ப சம்பாரிச்சு கொட்ற காசுல வீட்ல உக்காந்து தண்ட சோறு திங்க வேண்டியது….தின்னுபுட்டு ஆம்பளைங்கள அது நொட்டை இது நொட்டைங்க வேண்டியது….கேட்டா நான் உன் பொண்டாட்டி அப்டிதான் பேசுவேன்னு அராஜகம் வேற பண்றது…

இப்டி முடியுது…

இதுக்கு மேலயும் அடங்காத பொண்ணுங்கள குத்துமதிப்பா குறி வெச்சு டமார்ங்கற சத்ததோட செவுள நோக்கி ஒரு இடிய எறக்குங்க..தக்காளி காது கிழிஞ்சு செவுலு பனால் ஆகணும்…அதுக்கப்றம் ஆண்டவனே பேசுனாலும் அவளுக்கு காதுல கேக்க கூடாது…ஒரு முக்கா லிட்டர் ரெத்தமாச்சும் கொட கொடன்னு காதுலேர்ந்து ஓடி வரணும்..நீங்க அடிக்கற சத்தம் அங்க அவ அப்பனுக்கு கேக்கணும்…ரோட்ல தூக்கி எறிங்க பெட்டி கிட்டி எல்லாத்தையும்..பொண்டாட்டியாவது ஹேராவது…புருசனுக்கு அடங்காத பொண்டாட்டி வீட்ல இல்லங்க..உயிரோடையே இருக்க கூடாது…!

இப்போ புல்லட் அண்ணனுக்கும் வரோதயனுக்கும் மற்ற இலங்கை பதிவுலக நண்பர்களுக்கும் வெளியூர்க்காரனின் நன்றிகள்…

கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரோதயன் வெளியூர்க்காரன கைய புடிச்சு கூட்டிட்டு போய் இலங்கை பதிவர்கள்கிட்ட அன்போட அறிமுகப்படுதுனாறு..இந்த பய பேரு வெளியூர்க்காரன்..புதுசா எழுதறான்…படிச்சு பாருங்கன்னு ஒரு பதிவு வெளியிட்டு….மூணு நாளைக்கு முன்னாடி புல்லட் அண்ணன் ஐ லவ் யு சைந்தவி பதிவ தூக்கி கொண்டு போய் கோபுரத்துல வெச்சு அழகு பார்த்து வெளியூர்க்காரன இலங்கை பதிவுலகத்தோட செல்ல பிள்ளையா ஆக்கிட்டாரு..உங்க ரெண்டு பேருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்…கடந்த சில நாட்களா இலங்கை பதிவுலகம் வெளியூர்க்காரன் மேல நான் நெனைச்சு கூட பார்க்க முடியாத அளவுக்கு அன்பு மழைய பொழிஞ்சிது .கண்கோன்,பனையூரான்,சுபாங்கன் ,ஜெகதீபன், கதியால்,ஆரபி, சாஜு…இப்டி ஏகப்பட்ட அன்பு உள்ளங்கள்..உங்களுகெல்லாம் எப்டி நன்றி சொல்றதுன்னு தெரியல..சைந்தவிய நீங்க தலைல தூக்கி வெச்சு ஆராதிச்சத நானும் மறக்க மாட்டேன்…சைந்தவியும் மறக்க மாட்டா..ரெண்டு நாளுல இலங்கைலேர்ந்து மட்டும் எத்தன பேர் வந்து படிச்சிருகீங்கன்னு சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க…ஏன்னா அத என்னாலேயே இன்னும் நம்ப முடியல..

அதுக்கு நன்றி கடன் செலுத்தற மாதிரி புல்லட் அண்ணனோட புகழ் பெற்ற தொடர் பதிவான கடுப்பை கிளப்பும் பெண்கள் நான்காம் பாகத்த எழுதிருக்கேன்..அதோட ட்ரைலர்தான் மேல நீங்க படிச்சது..புல்லட் அண்ணன் அனுமதி குடுத்தாருன்னா கூடிய விரைவில் அதே தலைப்புல முழு பதிவையும் வெளியிட்டு பாவப்பட்ட ஆண்கள் சமூகத்த, பெண்கள்ங்கற பேரழிவிலிருந்து காப்பாத்துவேங்கரத மட்டும் தன்னடக்கதோடையும் பணிவோடையும் சொல்லிக்கறேன்.. முடிவு புல்லட் அண்ணன் கைல.

புல்லட் அண்ணேன் இப்ப நான் என்ன பண்ணட்டும்…?

பெண்கள்னாலே கடுப்பை கெளப்பறவங்கதான,அதுல என்ன புதுசா கடுப்பை கிளப்பும் பெண்கள்னு ஆண்கள் சமுதாயம் கோவத்துல கொந்தளிக்கறது எனக்கு புரியுது..அண்ணன்ங்கேலா கோவபடாதீங்க..வெளியூர்க்காரன் இருக்கான் உங்க தன்மானத்த காப்பாத்த…பொண்ணுங்கள்ள ரெண்டு வகை இருக்குன்னேன்..மொதோ வகை அடக்கமா ஒடுக்கமா நமக்கு அடிமையா வாழ்ந்து வாழறப்பவே மோட்சம் அடையற அதிர்ஷ்டசாலி பொண்ணுங்க..ரெண்டாவது வகை நம்மள அடக்கி ஒடுக்கி அசிங்கபடுத்தர திமிர் புடிச்ச மூதேவிங்க..இதுல நான் சொல்ல போறது ரெண்டாவது வகைய பத்தி..!

இந்த ரெண்டு வகை பொண்ணுங்களையும் கண்டுபுடிக்கறது ரொம்ப ஈசின்னேன்..நைட்டு சாப்டும்போது என்னடி மொளகா சட்னி அரைச்சிருக்க உரைப்பே இல்லாமன்னு கோவமா ஒரு சவுண்ட விட்டு கொடூரமா முறைச்சு பாருங்க..அயோயோ மன்னிச்சிருங்க அத்தான்…இனிமே இந்தமாதிரி பண்ணமாட்டேன்னு பயந்துகிட்டே கண்கலங்க சொன்னுச்சுன்னா அந்த புள்ள மொதோ வகை…ஆனா நீங்க சொல்லி முடிக்கறதுக்குள்ள மொளகா சட்னிய எடுத்து ஒரே அப்பா சப்புன்னு உங்க மூஞ்சில அப்பி இப்ப உரைக்குதாணு கேட்டுட்டு..மூதேவி இதுக்கு சோறு போடறதே பெருசு..இதுல இதுக்கு சட்னி உரைப்பா வேணும்னு கோவம் வேற வருதாம்னு சொல்லிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி சீரியல மறுபடியும் பார்க்க ஆரம்பிசிடான்னு வெச்சுக்கங்க….அந்த புள்ள ரெண்டாவது வகை..

அந்த மாதிரி பொண்ணுங்ககிட்ட நீ ரொம்ப கவனமா இருக்கனும்னேன்..எதிர்த்து திரும்ப கொவப்படீங்கன்னா உங்க உயிருக்கே ஆபத்தா முடிஞ்சிரும்..ஆம்பளைங்களுக்கு வீரமும் முக்கியம் இல்ல..விவேகமும் முக்கியம் இல்ல..உயிர்தான் முக்கியம்..அதனால சத்தம் போடாம மூஞ்சில இருக்கற மொளகா சட்னிய துடைச்சிட்டு, மிச்சம் இருக்கற சட்னிய வெச்சு இட்லிய சாப்ட்டுட்டு பூ போல நடந்து போய் தலைகானிய கட்டிபுடிச்சு தன்னம்பிக்கையோட தூங்குன்னேன்..நாளைக்காச்சும் நம்ப பொண்டாட்டி நமக்கு பயப்படுவான்னு..அட, மானம் ரோசம் இல்லாம வெக்கத்த விட்டு திரும்ப திரும்ப போராடி, இந்த பொட்டச்சிங்ககிட்ட பல்பு வாங்கறதுக்கு பேருதானுன்களே தன்னம்பிக்கை..

ஆனா உங்க எல்லாத்துக்கும் ஒரு அதிர்ச்சியான தகவல் என்னன்னா…மொதோ வகை பெண்கள் உலகத்துலேயே ரெண்டு பேருதான் இருக்காங்க..ஒன்னு எனக்கு வரபோற பொண்டாட்டி..ரெண்டாவது என் பொண்டாட்டியோட தங்கச்சி..!

உலகத்துல மத்த எல்லா வெங்கலமுமே ரெண்டாவது வகைதான்..ஆமாம்னேன்..உங்க பொண்டாட்டியும் சேர்த்துதான் சொல்றேன்..பார்ரா உடனே மனுஷனுக்கு சிரிப்ப..அம்புட்டு சந்தோசம்..ஒருத்தனாச்சும் இருக்கானே தைரியமா உண்மையா சொல்லன்னு..அண்ணேன் அண்ணேன் சிரிக்காதன்னேன்..அண்ணி வர்ற மாதிரி தெரியுது..நீங்க எதுக்கு சிரிக்கறீங்கன்னு தெரிஞ்சா அப்பறம் பூரியே போடாம மறுபடியும் ஒரு புது பூரி கட்டை வாங்க வெச்சுட்டானே சண்டாளபாவின்னு உங்க மேல அண்ணி ரொம்ப வருத்தபடுவாங்க..

பெண்கள் கடுப்ப கெளப்பற விசயங்கள பத்தி நாப்பது வருசத்துக்கு நாலு லட்சம் பதிவு போடலாம்னேன்…அப்ப கூட சொல்றதுக்கு ஏதாவது மிச்சம் இருக்கும்…ஆனா புல்லட் அண்ணேன் எனக்கு ஒரு பகுதிய மட்டும்தான் எழுதறதுக்கு அனுமதி குடுத்துருக்காரு..அதனால சிலத மட்டும் சொல்றேன்..

எல்லா ஆண்கள்ட்டையும் பெருந்தன்மையான விஷயம் ஒன்னு இருக்கு சார்…அது எல்லா பெண்களோட அழகையும் பாரபட்சம் இல்லாம ரசிக்கறது…ஆராதிக்கறது…ரொம்ப டென்சன் ஆனா அனுபவிச்சு பார்க்கனும்னு ஆசைப்படறது…இது ஒரு தப்பா சார்…அது பொறுக்காது இந்த எருமைங்களுக்கு.. ஏன் அவள பார்க்கற ,ஏன் இவள பார்க்கரன்னு நொய்யா நொய்யான்னு போட்டு சாவடிச்சி மேல போட்டோல இருக்கற பிகர் மாதிரி மூஞ்ச தூக்கி வெச்சுப்பாளுக…உன்னோட சனியன் புடிச்ச மூஞ்ச பார்க்க புடிக்காமதாண்டி நான் அவள பார்க்கறேன்னு தைரியமா உண்மையா சொல்லவும் முடியாது..பகல் வெளிச்சம், நைட் லேம்ப் வெளிச்சம், அத அணைச்சிட்டு சிலபல விசயங்கள நேர்ல பார்க்கறதால நம்ப பேஸ்லேர்ந்து வர்ற வெளிச்சம், இப்டி பல வெளிச்சங்கள்ள ஒரே மோரகட்டய எவ்ளோ நாள்தான் சார் பார்க்கறது..மனுஷனுக்கு ஒரு வெரைட்டி வேணாம்..இதெல்லாம் சொல்றதுக்கு நமக்கு ஆணுரிமை இல்லாம போச்சு சார்..அதுவும் இப்ப உள்ள பொண்ணுங்க ரொம்ப மோசம் சார்..ஆணுரிமைய பத்தி பேசுனா நைட்டு தூங்கும்போது மூக்குக்குள்ள டார்ட்டாய்ஸ் கொசுவத்திய எடுத்து சொருவிருவாளுக.. அதுவும் எரிஞ்சிகிட்ருக்கற கொசுவத்திய..

நைட்டு ஒரு பார்ட்டி இருக்கு கொஞ்சம் லேட்டா வர்றேன்னு சொன்னா ஆடுவாளுக பாருங்க ஒரு ஆட்டம்.. எய்யாடி…அப்டியே கோவமும் கடுப்பும் பத்திகிட்டு வரும்..நாம குடிச்சிட்டு அப்டி என்னங்க பெருசா தப்பு பண்ணிரபோறோம்…பொத்துனாப்ல குடிச்சிட்டு பொத்துனாப்ல வரபோறோம்..இதுல இவளுகளுக்கு என்ன வைத்தெரிச்சல் வந்துதுங்கறேன்..நாமெல்லாம் சந்தோசமா இருக்கறதா பார்த்து அவங்க படர பொறாமை கோவமா வெளியாவுது…அப்ப நமக்கு வர்ற கோவத்துக்கு அப்டியே தலமயிர புடிச்சு செவுத்தோட வெச்சு நசுக்கி பொளேர்னு ஒன்னு ஆசை தீர குடுக்கணும் போல இருக்கும்..ஆனா நெஜத்துல ஒன்னியும் பண்ண முடியாது…ஏன்னா நீங்க தலைமுடிய புடிக்க கைய தூக்கரதுக்குள்ள உங்க நெத்திக்கிட்ட ஸ்கின் ஓபன் ஆகி, புருவம் கொலாப்ஸ் ஆகி, ப்ளட் லீகேஜ் ஆரம்பிச்சிருக்கும்..

கடைசியா ஒன்னு மட்டும் சொல்றேன் அண்ணேன்..அந்த அது மட்டும் பிகருங்ககிட்ட இல்லைன்னு வெச்சுக்கங்க , தக்காளி இதுங்கெல்லாம் நமக்கு தேவையே இல்ல சார்…எல்லா ஜிகுடிங்களையும் ஒரு எடத்துல கூட்டமா நிக்க வெச்சு விஜயகாந்தோட விருத்தகிரி படத்த போட்டு காமிச்சு படம் முடியறப்ப மிச்சம் உயிரோட இருக்கற பீசுங்களையும் விஷ குண்டு போட்டு கொன்னுபுடனும்..கொன்னுபுட்டு ஜாலியா போய் பக்கத்துல இருக்கற டாஸ்மாக்ல வயறுமுட்ட குடிச்சிபுட்டு ஆனந்தமா வாந்தி எடுக்கணும்…அப்டியே வாந்தி வாயோட ஒரு சிகரெட்ட பத்த வெச்சு நிம்மதியா பாட்டு பாடிகிட்டே யூரின் போகணும்…உக்காந்துருக்கற சேர்லயே….அதுதான் சார் ஆம்பளைங்களுக்கு சொர்க்கம்…

அதுகப்ரம் பிராக்டிகலா யோசிச்சு பார்த்தீங்கன்னா ஆம்பளைங்களுக்கு எல்லா செலவும் மிச்சம் சார்..பவுடர், சோப்பு, பேஸ்டு, இப்டி எந்த செலவும் இல்ல..பொம்பள புள்ளயலே இல்லைனா அப்பறம் எந்த எழவுக்கு சார் அந்த கருமம் புடிச்ச டிரெஸ்ஸ எல்லாம் போடணும்..அப்டியே காத்தோட்டமா வேர்வை தொந்தரவு இல்லாம நிம்மதியா ஆதாம் சார் மாதிரி வாழ்ந்துட்டு போயிறலாம் சார்..யோசிச்சி பாருங்க..உங்க மேனேஜர் டிரஸ் போடாம நிம்மதியா வெறும் லேப்டாப்ப மட்டும் எடுத்துட்டு வர்றத..அதான் சார் ஆணுரிமை…

ஆனா, நீங்க ரொம்ப சந்தோசமா இருக்கப்பவோ இல்ல ரொம்ப சோகமா இருக்கப்பவோ நீங்க யாரு மடில சார் படுத்து அழுவீங்க…யாரு சார் உங்க தலைய கொதிவிட்டுகிட்டே நான் இருக்கேண்டா செல்லம் உனக்குன்னு சொல்லுவாங்க..

கடுப்ப கெளப்புனாலும் பரவால்ல சார்..பொண்ணுங்க வேணும் சார்…!

இன்னும் சொல்ல போனா..

அவங்க கடுப்ப கெளப்பறது கூட அழகுதான் சார்…!

Leave a Comment